சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு, புதிதாக மற்றுமொரு இராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டு தொடர்பான இராஜாங்க அமைச்சர் பதவி புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இராஜாங்க அமைச்சர் புதிய இராஜாங்க அமைச்சினை பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.
மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட முரண்பாடு நிலமையின் பின்னணியிலேயே விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கு குறித்த அமைச்சும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.