மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்துக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கும்.

 மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்துக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கும்.

இச்சம்பவம் குறித்து ஆராய  நான்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. என அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதி அமைச்சரினால் ஐவர் அடங்கிய குழுவொன்றும்,  சிறைச்சாலை திணைக்களத்தினாலும் ,  சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளராலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரையிலும் நான்கு குழுக்கள்   விசாரணை நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளன.

குழுக்களின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென மேலும் அந்த ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.