திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதம் ஆரம்பம்


இந்துக்களின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரதங்களில் ஒன்றான கந்த சஸ்டி விரதம் இன்று ஆரம்பமானது.

முருகப்பெருமானை வேண்டி ஆறு தினங்கள் இந்துக்கள் இந்த விரதத்தினை அனுஸ்டித்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் கொரனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகவும் குறைந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு கந்த சஸ்டி விரத பூஜைகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் மிகவும் பிரசித்திபெற்ற ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரத பூஜைகள் அமைதியான முறையில் நடைபெற்றது.

சுகாதார நடைமுறைகளைப்பேணிய வகையில் குறிப்பிட்டளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த வழிபாடுகள் நடைபெற்றன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் நடைபெறவுள்ள இந்த விரதத்தினை வீடுகளில் இருந்து விரதத்தினை அனுஸ்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.