மட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரனா தொற்று உறுதி – மட்டக்களப்பு மாவட்டம் ஆபத்தில்

மட்டக்களப்பு நகரில் மேலும் இருவருக்கும் ஏறாவூரில் மேலும் 04பேருக்கும் கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் தொற்றாளர் தொகை அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இனங்காணப்பட்ட இருவரும் நேற்றைய தினம் இனங்காணப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இவர்கள் கொழும்பு சென்றுவந்துள்ளதாகவும் இவர்களிடம் இருந்து ஏனையவர்களுக்கு தொற்று பரவியதா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இன்று இனங்காணப்பட்ட ஆறு பேருடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றின் தொகை 56ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 96ஆக அதிகரித்துள்ளது.

கொரனா தொற்றினை தடுக்கும் வகையில் சுகாதார பிரிவினர் விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.