(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா அச்சுறுத்தல் நிலவும் நிலையில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு குழுக்களை அமைத்து அதன்மூலம் கிராமமட்ட கண்காணிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்களுக்கான பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பான நிகழ்வு திருப்பழுகாமம் மகாவிஷ்ணு ஆலய வளாகத்தில் பழுகாமம் பிரதேசத்திற்குரிய பொது சுகாதார பரிசோதகர் .சீ.ரவிகரன் தலைமையில் நடைபெற்றது.
பழுகாமம் பிரதேசத்துக்குரிய ஆறு 6-கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கொரனா செயலணி குழுவானது அமைக்கப்பட்டு கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன
கிராமிய கொரனா செயலணி குழுவில் அங்கம் வகிக்கின்றவர்களான கிராம உத்தியோகத்தர்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,தாய் சேய் பராமரிப்பு உத்தியோகஸ்தர்,சமுர்த்தி உத்தியோகஸ்தர்,கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் ,இளைஞர் கழகங்கள்,விளையாட்டுக் கழகங்கள் ஆகிய கழகங்களும் சங்கங்களும் அங்கமவகிக்கின்றன.
இவர்களின் பணியானது வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களையும் கொனராவினை பரப்பும் வகையில் செயற்படுகின்றவர்களையும் கிராமங்களில் தனிமைப்படுத்தப் படுகின்றவர்களையும் கண்காணிக்கப்பட்டு அது தொடர்பிலான அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குகின்ற பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பழுகாமம் பிரதேசத்துக்குரிய நடைபெற்ற கூட்டம் இடம்பெற்றுள்ளன நாட்டில் வேகமாக பரவும் நோய்கள் பல உள்ளன அந்த நோயிலிருந்து மக்கள் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் நல்ல சுகாதார பழக்க வழங்க பேன வேண்டும் தனிநபர் இடைவெளி பேனவேண்டும் வெளியில் போகக் கூடாது வெளியில் போவதாக இருந்தால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் போன்ற விழிப்புணர்வுகளை கிராம மட்டங்களில் முன்னெடுப்பது குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் கிராமிய கொரனா செயலணிக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.




