பிள்ளையான் விடுதலையாவாரா – வெளியாகியுள்ள உண்மைத்தகவல்


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று அல்லது சில தினங்களில் விடுதலையாகும் சாத்தியம் உள்ளது.

2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் உட்பட ஆறு பேர் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுவருகின்றனர்.

2009ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது மட்டக்கள்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த கைது தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் விளக்கொன்று தொடரப்பட்டிருந்தது.குறித்த வழக்கில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சட்டத்திற்கு முரணான வகையில் பெறப்பட்டதாகவும் அதனை ஏற்றுககொள்ளவில்லையென அறிவிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றபோது குறித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சட்டத்திற்க முரணானது எனவும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளதனால் இன்றைய தினம் பிள்ளையான் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.