மறைந்த ஊடகவியலாளர் சந்திரமதிக்கு மட்டக்களப்பில் அஞ்சலி!
கொழும்பில் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் அமரர் சந்திரமதி அவர்களின் அஞ்சலி நிகழ்வு மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன் நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் சந்திரமதி அவர்களுக்கு அஞ்சலி விளக்கு ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் பு.சசிகரன் உட்பட பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.