அகில இலங்கை ரீதியில் 05வது இடத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம் சாதனை


வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சித்தி வீதங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தினை எட்டியுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

இம்முறை மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 93வீதமான மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.இதன்மூலம் வலயத்தின் அடைவுமட்டம் அதிகரித்துள்ளது.

அகில இலங்கை ரீதியாக தரப்படுத்தலில் மட்டக்களப்பு கல்வி வலயம் ஐந்தாம் இடத்தினை அடைந்துள்ளது.கடந்த ஆண்டு 10வது இடத்தில் இருந்த மட்டக்களப்பு வலயம் ஐந்தாவது இடத்திற்கு தரமுயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் 96வது இடத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமும் 99வது இடமான இறுதி வலயமாக கல்குடா கல்வி வலயமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.