உயர்தரப்பரீட்சை இன்று ஆரம்பம் -மட்டக்களப்பிலும் ஆர்வத்துடன் மாணவர்கள்


கா.பொ.த.உயர்தரப்பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவருகின்றது.

கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றியவாறு உயர்தரப்பரீட்சைகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை உயர்தரப்பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வலயம்,பட்டிருப்பு வலயம்,மட்டக்களப்பு மேற்கு வலயம்,மட்டக்களப்பு மத்தி வலயம்,கல்குடா வலயங்களில் இன்று உயர்தரப்பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்களுக்கு பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

பரீட்சை காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் இதன்போது பொதுச்சுகாதார பிரிவினரால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருந்ததுடன் கைகளை கழுவி சமூக இடைவெளிகளைப்பேணியவாறு பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.