போதைப்பொருள் வர்த்தகர் உயிரிழப்பு


மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட பரஸ்பர  துப்பாக்கி பிரயோகத்தில் போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் சோதனையின் போது, இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை பகுதியில் மாகந்துர மதுஷ் உயிரிழந்த சம்பவத்தின் போது, நிழலுலக உறுப்பினர்களினால், பொலிஸ் அதிகாரிகளை இலக்கு வைத்து கைக்குண்டு தாக்குதலொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு அமைய திருமணம் செய்துகொண்ட மனைவியிடம், மாகந்துர மதுஷின் சடலத்தை ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.