போரதீவுப்பற்றில் கொரோனா தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை


(ரஞ்சன்)

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் கொரோனா தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் வெல்லாவெளி ராணுவ பொறுப்பதிகாரியின் தலைமையில் திகதி ஆரம்பமானது. 

நாட்டினை அச்சுறுத்திவரும் கொரனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கோவில்போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலத்திற்கு முன்பாக போரதீவுப்பற்று பிரதேசசெயலக உதவி பிரதேச செயலாளர் .வெல்லாவெளி பொதுச்சுகாதார பரிசோதகர்  ,வெல்லாவெளி இராணுவ பொறுப்பதிகாரி மற்றும்  ராணுவ வீரர்கள் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்  பிரதேச சபை ஊழியர்கள் முச்சக்கர வண்டி சாரதிகள் பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உதவிப் பிரதேசசெயலாளரினால் சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேன்டும் என்றும் அவ்வாறு கடைப்பிடிக்கும்போதே இப்பிரதேசத்தில் கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து  மக்களை  பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வெல்லாவெளி பொதுச் சுகாதார பரிசோதகரினால் கட்டாயம் வீதி போக்குவரத்து செய்யும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கட்டாயம் சவர்க்காரம் போட்டு கைகளை கழுவ வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஓட்டோ சாரதிகள் அதிகமான பொதுமக்களை ஏற்ற வேண்டாம் எனவும் சுகாதார நடைமுறைக்கு ஏற்றவாறு பொது மக்களை ஏற்றிச் செல்லவேண்டும் எனவும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் எனவும் தெளிவூட்டப்பட்டது.

இதேபோன்று  கடை உரிமையாளர்கள் கடைக்கு வருகின்ற பொதுமக்களுக்கு கைகழுவும் வசதிகள் ஏற்படுத்தவேண்டும் என்பதுடன் முகக்கவசம் அணிய வேன்டும் என்றும் கடை உரிமையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேன்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது 

இராணுவ அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட கொரோனா நோய் சம்பந்தமான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஊர்வலமாக சென்று வெல்லாவெளி பொறுகாமம் சமுர்த்தி அலுவலகத்தை சென்றடைந்து அலுவலகத்தில் கொரோனா விழிப்புனர்வு கூட்டம் இடம் பெற்றது.