பீஜிங் மற்றும் டெல்லியில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டு இன்று அங்கு ஒட்சிசன் பைகளுடன் மக்கள் அலையும் நிலையேற்பட்டுள்ளது,அவ்வாறான ஒரு சூழ்நிலை இந்த நாட்டிலும் ஏற்படாத வகையில் அதனை பாதுகாக்கவேண்டியது எதிர்கால சந்ததியினரின் பொறுப்பாகும் என சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
எங்கள் நாடு எங்கள் கைகளில் என்னும் தலைப்பில் அனுஸ்டிக்கப்படும் சிறுவர் தினத்தில் சிறுவர்களுக்கு சுற்று சூழலலின் முக்கியத்தும் தொடர்பில் முக்கியத்துவமளிக்கும் வகையிலான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் கல்லூரியின் சூழல் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினையும் அதனை மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய தேவையின் முக்கியத்தும் தொடர்பில் அமைச்சரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து சூழலை பாதுகாக்கும் வகையில் மாணவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட தென்னைமரக்கன்றுகள் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.