மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறுமை நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகரின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு நாவற்குடா மற்றும் பூநொச்சிமுனை பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் பிரதேச மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது முதல் கட்டமாக 100 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு கோழி வளர்ப்புக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.
வறுமை நிலையில் உள்ள,குடும்பங்கள் தலைமைதாங்கும்,யுத்ததில் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தினை நோக்கமாக கொண்டு பல்வேறு வாழ்வாதார பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.