(புருசோத்)
இதன்படி மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த ஊழியர்களின் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கம்பஹா, திவுலபிற்றிய பகுதியில் முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 39 வயது பெண்க்கு கொரோனா தொற்று அவர் கடமை புரியிம் ஆடை தொழில்சாலையில் வைத்து தெற்றுக்கு உள்ளாகி இருக்கிறார் என்று அவரது கணவன் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் ஆடைத் தொழில்சாலையில் கடையாற்றிய கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய புங்குடுதீவைச் சேர்ந்த பெண் யாழ்பானத்திற்கு வருகைதந்த ஒழுங்குகளை வடமாகான சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
புங்குடுதீவைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்கு அந்தப் பெண் கொழும்பில் இருந்து பயணித்த அந்த பேருந்து புத்தளம் பகுதியில் பழுதடைந்து உள்ளது அதனால் ஞாயிற்று கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் பரித்தித்துறை இ.போ.ச சொந்தமான பேருந்தில் பயணித்து அதிகாலை 4.30 மணிக்கு கொடிகாமத்தில் இறங்கி உள்ளார் பின்னர் வேறோரு பேருந்தில் அந்த பெண் யாழ்பான நகருக்கு பயணித்துள்ளார்.
கொழும்பு - பரித்தித்துறை சேவையில் ஈடுபட்ட சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை பொதுசுகாதார பரிசோதகரால் இளங்கான பட்டு சுய தனிமை படுத்தலுக்கு உற்படுத்தபட்டுள்ளார்கள்.
எனவே குறித்த இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்கள் உடனடியாக வட மாகான சுகாதார பணிமனையிடன் தெடர்வு கொள்ளுமாறு (021 222 6666) வட மாகான சுகாதார பணிப்பாளர் கோரியுள்ளார்.