கம்பஹாவில் 12 பொலிஸ் பிரிவுகளில் மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்



(புருசோத்)

 கம்பஹா மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கம்பஹா, கிரிந்திவெல, தொம்பே, பூகொடை, கணேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்து கிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய , மினுவாங்கொடை, வெயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் உள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் பொது நிகழ்வுகளில் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.