கண்ணபுரம் படலக்கல்லடி அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு பெருமானின் மஹோற்சவம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதி தமிழர்களான நாகர்கள் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான வெல்லாவெளி முப்பத்தைந்தாம் கிராமம் கண்ணபுரம் படலக்கல்லடி அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு பெருமானின்  மஹோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஈழமணி திரு நாட்டின் சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டு சைவ வைணவ வழிபாட்டில் சிறந்து விளங்கும் கடல் சூழ் ஈழவள நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டு  மாநகரின் தென்திசையில்  வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை தாங்கி வளமுடன் திகழும் முப்பத்தைந்தாம் கிராமம் கண்ணபுரம் படலக்கல்லடி பகுதியில்  தானாகத் தோன்றி  பர முதல்வனாய் வாழ்வின் ஆதார புருஷனாய் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு பெருமானுக்கு  துவஜாரோகன மஹோற்சவ திருவிழா ஆரம்பம் 2020-09-22

இன்று காலை 6.30 மணி முதல் கொடி யேற்றத்துக்கான கிரியைகள் இடம் பெற்று  துவஜாரோகணம் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தம்பம் அருகில் விசேட பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. 

அதன்பின்னர்  படலக்கல் மலை அடியில் 1ம் நூற்றாண்டுக்கு முன் அமைய பெற்ற நாகர் சிலைக்கு விசேட பூசைகள் இடம் பெற்று  மலை உச்சியில் அமையப்பெற்ற முருகனுக்கு விசேட பூசை நடைபெற்றது.

வருடாந்த உற்சவத்தில் நாளை மறுதினம் குபேர லட்சுமி பூசை இடம்பெற் 27 ஆம் திகதி உறியடித் திருவிழா நடைபெறும்.

திகதி திங்கட்கிழமை ஓம் நாள் காலை 7 மணிக்கு முப்பத்தைந்தாம் கிராமம் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தில் இருந்து மேள வாத்தியங்களுடன் பாற்குடபவனி பக்திபூர்வமாக ஆரம்பமாகி பிரதான வீதியூடாக ஆலயத்தை வந்தடையும் அதனைத் தொடர்ந்து பால் அபிஷேகம் சங்காபிஷேகம் என்ப  நடைபெற்று அடியார்களுக்கு பிரதான குரு அவர்களால் வலம்புரி சங்கினால் சங்காபிஷேக தீர்த்தம் வழங்கப்படும் 12 மணிக்கு பகல் திருவிழா இரவு 9 மணிக்கு  திருவிழா புஷ்பாஞ்சலி திருவிழா  இடம்பெறும்.

30ஆம் திகதி திருவேட்டையும் 01ஆம் திகதி தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடைபெறவுள்ளது.