மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலமாக விபத்துகளில் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன.
நேற்று இரவு மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு பகுதியில் விபத்தில் சிக்கிய சருகு புலியொன்று மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்ததினால் அங்கு மக்கள் மத்தியில் அச்ச நிலையேற்பட்டது.
இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குவந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த சருகு புலி பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
குறித்த சருகுபுலிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு பாதுகாப்பான முறையில் காட்டுக்குள் விடுவதற்கான நடவடிக்கையெடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.