(செங்கலடிநிருபர் - சுபோ)
கிழக்குஇலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஏறாவூர்-5ஆம் குறிச்சி ஸ்ரீ மதுமலர்க்காவீரபத்திரர் சுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக அடியார்கள் புடைசூழவெகுவிமர்சையாக நடைபெற்றது.
இயற்கைவழம்நிறைந்த ஏறாவூர் 05ம் குறிச்சியிலே வீரபத்திரர் மூல மூர்த்தியாகவும் காளி அன்னை மாரிஅன்னை பக்கத்திலும் வீற்றிருப்பவர்களாகவும் வெளிப்புரத்தே நாக தம்பிரானும் ஆலயநுளைவாசலிலே விநாயகரும் கோயில் கொண்டிருப்பதாலும் இவ்வாலயம் மதுமலர்க்கா வீரபத்திரர்சுமாமி ஆலயம் எனும் சிறப்புப்பெயர் கொண்டு விழங்குகின்றது.
மதுமலர்க்காவீரபத்திரர் சுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 22ம திகதி கொடியேற்றத்துடன்ஆரம்பமானது. தொடர்ந்து 09 தினங்கள் ஆலயத்தில் தம்ப பூசைஇ வசந்த மண்டப பூசைஇசுவாமி உள் வீதியுலா வெளிவீதியுலா என்பன நடைபெற்று வந்தன.மகோற்சவபிரதமகுரு சிவஸ்ரீ ஸ்ரீரங்கநாதன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற வசந்த மண்டப பூசையினைத்தொடர்ந்து வீரபத்திரர் சுவாமி வெளிவீதியில் சித்திரத் தேரில் ஆரோகணிக்கப்பட்டதைதொடர்ந்து விசேட பூசைகள் நடைபெற்றன.தேர்உற்சவத்திற்காக தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் வழமையான நடைமுறைகளைத் தொடர்ந்து வடம்இழுக்கப்பட்டு தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.