கடந்த ஏப்ரல் குண்டுவெடிப்பு மற்றும் கொரனா அச்சுறுத்தல்கள் காரணமாக மாணவர்கள் மத்தியில் கல்வி தொடர்பில் ஆர்வம் இல்லாத நிலையும் நம்பிக்கையில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் முதலில் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தினையும் நம்பிக்கையினையும் ஏற்படுத்தக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளதாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள செல்வி அகிலா ஞானசூரியம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள செல்வி அகிலா ஞானசூரியம் அவர்களுக்கு இன்று வலயக்கல்வி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளராக செல்வி அகிலா ஞானசூரியம் கடமையாற்றிவந்த நிலையில் கடந்த ஆண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வி அகிலா ஞானசூரியம் அவர்களுக்கு வலயக்கல்வி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
படுவான்கரை பகுதி பொதுமக்கள் மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்,கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்களினால் இந்த வரவேற்பளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் மத்தியில் கடமையினைப்பொறுப்பேற்றுக்கொண்ட அவர் உத்தியோகத்தர்கள் மத்தியில் கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த புதிய வலய கல்விப்பணிப்பாளர்,
ஏறத்தாள ஒன்றரை வருடத்திற்கு பின்னர் எனது சொந்த வலயத்திற்கு வந்திருக்கின்றேன்.மீண்டும் எனது வீட்டுக்கு வந்த உணர்வுதான் என்னிடம் இருக்கின்றது.
கடந்த ஏப்ரல் குண்டுவெடிப்பு மற்றும் கொரனா அச்சுறுத்தல்கள் காரணமாக மாணவர்கள் மத்தியில் கல்வி தொடர்பில் ஆர்வம் இல்லாத நிலையும் நம்பிக்கையில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. முதலில் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தினையும் நம்பிக்கையினையும் ஏற்படுத்தக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளது.வழமையான செயற்றிட்டங்களை விட இரண்டு மடங்கான வேலைத்திட்டங்களை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லவேண்டிய கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மட்டக்களப்பு வலயத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் பிள்ளைகளை பார்க்கும்போது அது படுவான்கரை பகுதியை சேர்ந்த பிள்ளைகளாகவே இருக்கின்றது.இன்னும் மூன்றரை வருடங்கள் இந்த வலயத்தில் இருந்து இதனை என்ன நிலைமைக்கு கொண்டுவர நினைத்தேனோ அந்த நிலைமைக்கு கொண்டுவருவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
பெற்றோரை பொருத்தவரையில் மாணவர்களுக்கு கல்வி மீது ஆர்வத்தினை ஏற்படுத்துவதையும் பாடசாலைக்கு பிள்ளைகளை ஓழுங்கான முறையில் அனுப்பவேண்டிய தேவையும் உள்ளது.இன்னும் சில நாட்களில் பாடசாலைகள் வழமையான நிலைமைக்கு திரும்பிவிடும்.
ஏனைய கல்வி வலயங்களை விட மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் கடும்சவால்கள் இருக்கின்றது.அந்த சவால்களை நிச்சயமாக நாங்கள் வெற்றிகொள்வோம்.நான் இந்த வலயத்தில் முதல் கடமையேற்றபோது சாதாரண தர பெறுபேறுகளில் இலங்கையில் கடைசி இடத்தில் இந்த வலயம் இருந்தது.நான் கடமையாற்றிய காலத்தில் 25வீத அதிகரிப்பு ஏற்பட்டதுடன் இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிகரிப்பனை காட்டிய முதலாவது வலயமாகவும் இந்த வலயம் இருந்தது.அனைவரது ஒத்துழைப்பினையும் கொண்டு இன்னும் இந்த வளர்ச்சிப்போக்கினை அதிகரிக்கமுடியும்.
புழிவாங்கும் செயற்பாடுகள் எவையும் நடைபெறாது.அதற்கு நேரமும் எனக்கு இல்லை.வலயத்தின் முன்னேற்றம் குறித்த சிந்தனைமட்டுமே என்னிடம் உள்ளது.என்றார்.