உலகின் முதல் தமிழ் பேராசிரியரும் இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் கோலோச்சிய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கருத்துக்களும், நற்செய்திகளும், அறிவியலும் இளம்தலைமுறையினருக்கும் உலகின் அனைத்து பாகங்களுக்கும் பரவ வேண்டும் எனும் உயரிய நோக்கோடு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளது சமாதி அமைந்துள்ள மணிமண்டப வளாகத்தில் அடிகளாரின் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கல்லடியில் அமைந்துள்ள சுவாமிகளது சமாதியின் அருகில் இருந்து அதிகளவானவர்கள் வழிபடுவதற்கும், அவரின் மணிமண்டப வளாகத்தினை மேலும் அழகுபடுத்தும் முகமாகவும் கட்டிட வேலைகளுக்கான ஆரம்பப் பணி இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷயானந்த ஜீ மகராஜ் அவர்களும் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஆகியோரது தலைமையில் காலை 7:00 மணியளவில் சுபமுகூர்த்த வேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு சுவாமிகளது படைப்புக்களான நூல்கள் மற்றும் அவரோடு தொடர்புடைய ஏனைய அம்சங்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என யாவரும் அறிந்துகொள்ள காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷயானந்த ஜீ மகராஜ் அவர்களும் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா, சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் இராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.