மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்னொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பகல் மட்டக்களப்பு –செங்கலடி பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்;டார் சைக்கிளில் முன்னால் சென்றவர்கள் திடீரென சைக்கிளை திருப்பியதினால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதன்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.