மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

வெல்லாவெளியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி –அறுவடையின்போது துயரம்

(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு   வெல்லாவெளி 40ம் கிராமம் வம்மியடி ஊற்று   கிராமத்தை  சேர்த நல்லையா நாகேந்திரன்  வயது 56 உடைய 4பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

38ம் கிராமத்தில் நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்தபோது உழவு இயந்திரத்தின் சாரதிக்கு அருகில் இருந்துவந்தவர் தவறி விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு  உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.