மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

கொக்கட்டிச்சோலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் துண்டுப்பிரசுரம் மக்களிடம் கையளிப்பு!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பகுதியில் ஆறாம் கட்டமாக தேர்தல் பிரசார பணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்தின் தலைமையில் (11)இன்று மேற்கொள்ளப்பட்டது.

 எதிர்வரும் ஆவணி ஐந்தாம் திகதி இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பொதுவான துண்டுப்பிரசுரங்களை மக்களுக்களிடம் கையளிக்கப்பட்டது..

 இப்பிரச்சார பணியில் மட்டு மாநகர சபை முதல்வர் சரவணபவான், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா,மண்முனை தென்மேற்கு தவிசாளர் புஸ்பலிங்கம்,பிரதிதவிசாளர் கோபாலப்பிள்ளை, பட்டிருப்பு தொகுதி இ.த.க பொருலாளர் நடராசா,பட்படிப்ட்டிபளை பிரதேச கிளை செயலாளர் நேசதுரை, பட்டிப்பளை பிரதேச கிளையின் உறுப்பினர் உதயகுமார்,வாலிபமுன்னணி உறுப்பினர் தனுஷ்கரன், வாலிபமுன்னணி உறுப்பினர்களும் கலந்து பிரச்சார பணி முன்னெடுக்கப்பட்டது.