( செங்கலடி நிருபர் )
ஏறாவூர் நகர சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் கணேசன் பிரபாகரன் அவர்களின் பரிந்துரையில் 1இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான மின் விளக்குகள் ஏறாவூர் நகரசபையினால் பொருத்தப்பட்டன.
தனக்கான இவ்வருடம் நிதி ஒதுக்கீட்டில் (தனிநபர் ஒதுகீட்டு தொகை 150000ரூபா ) 1ம் வட்டார மக்களின் பாவனைக்காக இருள்சூழ்ந்திருந்நத வீதிகளில் பொறுமதியான சுமார் 20எல்.ஈ.டீ மின்குமிழ்களை ஏறாவூர்04இ எல்லை நகர் ஆகிய பிரதேச வீதிகளுக்கு பொருத்தப்பட்டதாக க.பிரபாகரன் தெரிவித்தார். தமக்கு வாக்களித்து நகரசபை உறுப்பினராக்கிய தமது பிரதேச மக்களுக்கான இவ்வாறான மக்கள் நலன்சார்ந்த பணிகளை இன்னமும் சிறப்பாகச் செய்யவுள்ளதாகவும் பிரபாகரன் மேலும் தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக தமது பிரதேசம் இருள்சூழ்ந்திருந்ததாகவும் ஏறாவூர் நகரசபை உறுப்பினர் பிரபாகரன் அவர்களின் முயற்சியினால் பெறுமதியான மின்குமிழ்கள் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தாம் இரவு வேளைகளில் அச்சமின்றிப்பயணிப்பதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்ததுடன் க.பிரபாகரன அவர்களுக்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.