மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொல்லநுல்லை கிராமத்தில் வசிக்கும் தேவைப்பாடு உடைய முன்னாள் போராளியான ராமலிங்கம் வேணுதாசன் என்பவருக்கு லண்டனில் வசிக்கும் வசிகரன் அவர்களின் நிதியுதவியினால் வாழ்வாதாராத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை பண்ணை வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
பண்ணை வேலைத்திட்டத்திற்க்கான ஆரம்ப பணி நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இன்நிகழ்வில் எமக்காக நாம் ஒருங்கிணைப்பாளர் லோ. தீபாகரன் உறுப்பினர் சுரேஸ்குமார் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.






