சக்தி கலாமன்றத்தினால் 5ம் கட்ட நிவாரணப் பணி முன்னெடுப்பு

 (எஸ்.நவா)
தற்போது ஏற்பட்டிருக்கின்ற கொவிட் 19 தாக்கத்தின் போது வாழ்வாதாரங்களை இழந்து நிக்கதியாகியுள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தில் பாலமுனை மண்டூர் பிரிவுகளில் உள்ள 200 குடும்பங்களுக்கு வெல்லாவெளி சக்தி கலாமன்றத்தினால் நிவாரண பொதிகள்  வழங்கிவைக்கப்பட்டது.  அவுஸ்ரேலியா Tamil engineers foundation ஊடாக பொறியியலாளர் திரு.ஜுட்.நிர்மலராஜா அவர்களின் ஏற்பாட்டில் வெல்லாவெளி சக்தி கலாமன்றத்திற்கு ரூ.200000 நிதி கிடைக்கப் பெற்றது.

ரூபாய் 1230 பெறுமதியான நிவாரணப்பொதிகளை 200 குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வெல்லாவெளி சக்தி கலாமன்றத்தின் ஒத்துழைப்புடன் மண்டூா் பாலமுனை போன்ற கிராமங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.