காயன்குடா பிரதேசத்தில் இணைகரம் அமைப்பினரால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இணைகரம் இளைஞர்கள் ஒன்றியம்  அமைப்பானது பல்வேறு நிவாரண  உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.. அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காயன்குடா பிரதேசத்தில்  வசிக்கும் 20 குடும்பங்களுக்கு வாணி சமூக  பொருளாதார சுய மேம்பாட்டு நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இணைகரம் அமைப்பினரால் இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கி
வைக்கப்பட்டன.