போரதீவுப்பற்று பிரதேசத்தில்; 2ம் கட்ட நிவாரணப் பணி பெரிய கல்லாறு கடனாச்சியம்மன் ஆலய பக்தர்கள்


 (எஸ்.நவா)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது வருமானங்களை இழந்தள்ள அன்றாடம் தொழிலில் ஈடுபடுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரிவிலுள்ள விளாந்தோட்டம்-194  மாலையர்கட்டு-74  கணேசபுரம்-130 சங்கர்புரம்-160 பகுதிகளைச் சேர்ந்த 558 குடும்பங்களுக்கு பெரியகல்லாறு கடனாச்சியம்மன் ஆலய பக்தர்களின் நிதியுதவியுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெல்லாவெளி சக்தி கலாமன்ற உறுப்பினர்கள் இணைந்து ருபா 1229722 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 2ம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
முதலாம் கட்ட நிவாரணப் பணியானது போரதீவுப்பற்று பிரிவில் உள்ள  கண்ணபுரம் கண்ணபுரம் கிழக்கு காக்காச்சிவட்டை பிலாலிவேம்பு வெல்லாவெளி பகுதிகளுக்கு 250 குடும்பங்களுக்கு 504500ருபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் போது பிரதேச  செயலாளர் ஆர்.ராகுலநாயகி உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் பெரிய கல்லாறு கடனாச்சியம்மன் ஆலய பக்தர்கள் பொது சுகாதார உத்தியோகத்தர் கிராம சேவக உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வெல்லாவெளி சக்தி கலாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டனர்
மேலும் இப்பணியானது தொடர்ந்து மேற்கொள்வதோடும் கல்வி சார்பாக மாணவர்களை வளப்படுத்துவதற்கு 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்ற இருக்கும் 650 மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் க.பொ.த உயர்தரம் / சாதாரண தர வறிய மாணவர்களுக்கான உதவிகளும் வழங்குவதற்கு இவ்வமைப்பு முன்வந்துள்ளது விசேட அம்சமாகும்.