மட்டு.போதனா வைத்தியசாலை கொரனா பிரிவுக்கு ஜி.கே.பவுண்டேசனால் பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் செயற்படும் கொரனா தொற்று சிகிச்சை பிரிவுக்கு ஒரு தொகை பாதுகாப்பு அங்கிகள் இன்று மாலை வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கையின் பல பாகங்களிலும் இன்று கொரனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புனானை உட்பட பல பகுதிகளில் தனிப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் கொரனா தொற்று தொடர்பிலான சிகிச்சைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசேட கொரனா சிகிச்சை பிரிவில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் போதியளவு பாதுகாப்பு அங்கிகள் இல்லாத நிலை போதனா வைத்தியசாலையில் காணப்படும் நிலையின் ஜீ.கே பவுண்டேசனால் ஒரு தொகை பாதுகாப்பு அங்கிககள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி ரஞ்சினி கணேசலிங்கத்திடம் ஜீ.கே பவுண்டேசன் தலைவர் கோவிந்தன் கருணாகரம்,அதன் செயலாளர் க.தவராஜா ஆகியோரினால் வழங்கிவைக்கப்பட்டது.

ஜி.கே.பவுண்டேசனால் ஊரடங்கு வேளையிலும் இரவு பகல் பாராது தொடர்ச்சியான அமரர் ஊர்தி சேவையும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.