பெரிய கல்லாற்றில் “அடைக்களம்” அமைப்பினால் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கபட்டன

பெரிய கல்லாற்றில் “அடைக்கலம்” அமைப்பினால் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கபட்டன




(புருசோத்)

பெரிய கல்லாற்ற்றில் நீண்ட காலமாக சமுக சேவை செய்து வருகின்ற அமைப்பான “அடைக்கலம்” அமைப்பினால் பெரிய கல்லாற்றில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மற்றும் அன்றாடம் கூலி தொலில் புரிவோர், மீன் பிடி தொலில் இடுபடுவோர் சமூர்த்தி பயனாளிகள், மற்றும் சமூர்த்தி இல்லாமல் வறுமையில் உள்ளோர் என்பவர்களை தெரிவு செய்து “அடைக்கலம்” அமைப்பானது நிவாரன பொருட்களை கடந்த இரண்டு நாட்களாக வழங்கி வைத்து கொண்டு வருகின்றது இதுவரைக்கும் 1300 /= ரூபா பெறுமதியான 450 பொதிகளை 450 குடும்பங்கலுக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது

 இந்த நிவாரண பொருட்களுக்கான  நிதி உதவியினை சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற உறவுகளும் கனடா நாட்டில் வசிக்கின்ற புலம்பெயர் உறவுகளும் மற்றும் அடைக்களம் அமைப்பின் உள்ள உறுப்பினர்களுமாக சேர்ந்து இந்த மகத்தான பணியை முன் எடுத்து வருகின்றனர் 

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் இந்த சமயம் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு இந்த அமைப்பில் இயங்கி வருகின்ற இளைஞர்கள் கடும் சிரமத்தின் மத்தியிலும் பாதிக்கப்பட்டவர்களின் விடுகளுக்கே சென்று   சுகாதார அமைச்சினால் வழங்கப்ட்ட கொரேனா பாதுகாப்பு அறிவுறுத்தலுக்கு அமையும்மாறு இந்தநிவாரண பெருட்களை வழங்கி வைத்து கொண்டு வருகின்றார்கள் என்பதும் குறிப்பிட தக்க விடயமாகும்

இந்த “அடைக்கலம்” அமைப்பானது பெரிய கல்லாற்றி பல சமுக சேவையினை செய்து வருகின்ற அமைப்பாகும். பெரியகல்லாற்றில் மலசல கூடம் இல்லாதோருக்கு இதுவரைக்கும் பதினைந்துக்கும் மேற்பட்ட மலசல கூடங்களை அமைத்து கொடுத்திருக்கின்றார்கள் அது மட்டுமல்லாமல் தனது கிராமம் மட்டும் அல்லாது அயல் கிராமமான துறை நிலாவனை போன்ற கிராமங்களுக்கு  வீடு இல்லாத வறிய குடும்ம்பங்களுக்கு வீடுகளை அமைத்து கொடுத்திருக்கின்றார்கள் என்பது பாரட்ட கூடிய விடயமாகும் கல்வி துறையிலும் பலமானவர்கள் இவர்கள் அமைப்பினால் கல்வி கற்று கொண்டு வருகின்றனர் என்பதும் சிறப்பான விடயமாகும் இவர்களது சமுக சேவை தொடர எமது வாழ்த்துக்கள்.