முனைப்பினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவிக்கரம்.



முனைப்பு நிறுவனத்தினால் கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து கஸ்ரப்படும் மக்களுக்கான நிவாரணப் பணிமுன்னெடுக்கப்பட்டது.       

 முனைப்பு சுவிஸ் கிளையின் அனுசரணையில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இவ் உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையில் இன்று முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அம்பாரை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்கும் வழங்கி வைக்கப்பட்டது.   

   குறித்த நிவாரணப் பொதிகளை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவார் மாணிக்கப்போடி சசிகுமார் செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர் அ,தயானந்தரவி ஆகியோர்  பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடியதற்கு அமைய உதவிப் பிரதேச செயலாளர்கள் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களிடம் கையளித்தனர்.

        முனைப்பு நிறுவானமானது யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கல்வி அபிவிருத்தித் திட்டத்தினை பிரதானமான செயற்படுத்தி வந்தாலும் அவ்வப்போது இடம் பெறுகின்ற இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான நிவாரணப் பணியிலும் பாரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் சேவை தேவையின் நிமித்தம் அவ்வப்போது பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவானத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தெரிவித்தார்.