மட்டக்களப்பு நகர்ப்புறத்தில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கஸ்ட நிலையில் உள்ளவர்களுக்கு உதவி

கொரனாவின் தாக்கம் காரணமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் ஊரங்கு காரணமாக மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூக அமைப்புகள் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பல்வேறு நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாநகருக்குட்பட்ட பனிச்சையடி கிராம மட்ட விழிப்பு குழுவின் வேண்டுகோளுக்கு அமைய ஒரு தொகுதி நிவாரணப்பொருட்கள் இன்று மாலை வழங்கிவைக்கப்பட்டன.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவா இரா.சாணக்கியனிடம் பனிச்சையடி கிராம மட்ட விழிப்பு குழுவின் தலைவி திருமதி ரஜனி ஜெயப்பிரகாஸ் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

திராய்மடு,பனிச்சையடி,சத்துருக்கொண்டான் உட்பட ஐந்து கிராமங்களை சேர்ந்த 130 குடும்பங்களுக்கு இந்த நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கொரனாவின் தாக்கம் காரணமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் ஊரங்கு காரணமாக தொழில் வாய்ப்பினை இழந்து மிகவும் கஸ்ட நிலையினை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகருக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியிலும் தொழில் வாய்ப்பினை இழந்து மிகவும் கஸ்ட நிலையினை எதிர்கொள்ளும் நூறு குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.