மட்டக்களப்பு மாவட்டம் உட்பட ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 ஆம் திகதி காலை 6.00 மணி வரை அமுலில் இருக்குமென அறிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் அன்றைய தினம் காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பி.ப 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏப்ரல் 14 ஆம் திகதி ஊரங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.