சித்திரை புத்தாண்டை வீட்டில் இருந்து கொண்டாடுமாறு வேண்டுகோள்

சித்திரைப்புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்கள் வீட்டில் இருந்து அமைதியான முறையில் கொண்டாடுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளருமான என்.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சித்திரை புத்தாண்டை அனுஸ்டிக்குமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

சித்திரைப்புத்தாண்டில் அநாவசிய செலவுகளை தவிர்த்து அந்த பணத்தினை ஏழை எளியவர்களுக்கு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.