கொரனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸ் ஊரடங்கின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மதுபாவனையினை ஒழிக்கும் வகையில் விசேட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
இதன்கீழ் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை பாரியளவில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளும் நிலையமொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது.
வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமியின் தலைமையில் வவுணதீவு,நெடுஞ்சேனை பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியிலேயே இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது 15பரல்களில் இருந்து சுமார் 1500லீற்றர் கசிப்பு காய்ச்சுவதற்கான கோடா மீட்கப்பட்டு அவை அழிக்கப்பட்டதுடன் சுமார் 200 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் கசிப்பு விற்பனைக்காக பயன்படுத்தப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் இது தொடர்பிலான தொடர் விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.