கொரனா தொற்றினை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே அவற்றினை கட்டுப்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் வீதியோர வியாபாரங்கள் அனைத்தும் முற்றுமுழுதாக தடைவிதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையினால் 3000குடும்பங்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தற்போது நாட்டில் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.நாளை ஊரடங்கு தளர்த்தப்படும்போது மக்களை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு மாநகரசபைக்கு இருக்கின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ள பொதுச்சந்தைகளை பல பகுதிகளாக பிரித்து வேறுவேறு இடங்களில் நடாத்துவதன் ஊடாக பொதுமக்கள் கூடுவதற்கான சந்தர்ப்பத்தினை குறைக்கமுடியும்.
அதனடிப்படையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்திற்குள் ஒரு பகுதியினரும் பழைய மாட்டுமால் வீதியில் உள்ள பூங்காவில் ஓரு பகுதியினரும் ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் ஒரு பகுதியினரும் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியிலும் இந்த சந்தைகள் செயற்படும்.
பொதுமக்கள் இந்த விடயங்களில் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும்.சமூக இடைவெளியை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும்.மட்டக்களப்பு பொதுச்சந்தையில் மீன்வியாபாரமும் இறைச்சி வியாபாரமும் நடைபெறும்.அதேபோன்று கல்லடியில் மீன் வியாபாரம் நடைபெறும்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் வீதியோர வியாபாரங்கள் அனைத்தும் முற்றுமுழுதாக தடைவிதிக்கப்படுகின்றது. இதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பும்பெறப்பட்டுள்ளன.
இதன்மூலம் கொரனா தொற்றுக்களை தடுக்கும் வகையில் இருக்கும் என நினைக்கின்றேன்.பொதுமக்கள் இந்த முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.எங்களது அறிவுறுத்தல்களை ஏற்று மக்கள் செயற்படும்போது மட்டக்களப்பில் கொரனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கமுடியும்.