மட்டக்களப்பு மாநகரசபையினால் மட்டக்களப்பு நகருக்குள் மக்கள் கூடும் இடங்களில் கிருமிகளை அகற்றும் நோக்கோடு கிருமிநாசினி விசிறும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாளை காலை மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையிலும் இந்த தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் உயிரியல் ரீதியான யுத்தமெனும் உலக தொற்று நோயாக கொவிட் 19 கொரோணா வைரஸ் என வெளிப்படுத்தியுள்ள நிலையில் பொது மக்களின் நலன்கருதி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மருந்து தெளிக்கும் கருவிகளை சுமந்துசென்று மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை மாநகரசபை ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்டனர்.
நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,பேரூந்து நிலையங்கள்,பொதுச்சந்தைகள்,சுகாதார நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் தொற்று நீக்கி மருந்துகள் தெளிக்கப்பட்டன.