மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளராக நியமனம்பெற்ற திருமதி சுஜாதா குலேந்திரகுமார் இன்று காலை வலய கல்வி அலுவலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மயில்வாகனம் நேற்றுடன் ஓய்வுபெற்றுச்சென்றுள்ள நிலையில் புதிய கல்வி பணிப்பாளராக திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிவந்த நிலையில் வலயத்தின் புதிய கல்வி பணப்பாளராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய கல்வி பணிப்பாளருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் வலயத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர்கள்,உதவி கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக்கல்வி அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
சிறந்த கல்வி நிருவாக சேவையாளரான இவர் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபராகவும் கல்குடா மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.