மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் உள்ள புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார,சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்புக்காரியாலயம் ஊடாக இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார,சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்புக்காரியாலயத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கோப்ரல் டபிள்யு கே.சாந்த தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார,சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்புக்காரியாலயத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் மேஜர் விஜயரெட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்ட 09 போராளிகள் இதன்போது வாழ்வாதார உதவிகள் வழங்கழவைக்கப்பட்டன.

இதன்போது ஏழு போராளிகளுக்கு மா அரைக்கும் இயந்திரங்களும் 02போராளிகளுக்கு மிளகாய் அரைக்கும் இயந்திரங்களும் சுமார் ஐந்தரை இலட்சம் ரூபாவில் வழங்கிவைக்கப்பட்டன.

ஜனாதிபதி கோத்தபாயவின் பணிப்புரைக்கு அமைவாக முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.