வீதி சமிக்ஞையை மீறி செயற்படும் வாகன சாரதிகள் -பாடசாலைகளுக்கு அருகில் சிரமப்படும் பெற்றோர்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாடசாலைகளில் சிலவற்றிற்கு பாடசாலை முடியும் வேளைகளில் பிள்ளைகளை ஏற்றிச்செல்வதற்கு பெற்றோர் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டக்களப்பு நகரில் உள்ள மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பாடசாலை நேரம் முடியும் வேளையில் பிள்ளைகளை ஏற்றச்செல்லும் பெற்றோரும் பிள்ளைகளை ஏற்றிவரச்செல்லும் பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

மெதடிஸ்த மத்திய கல்லூரி வீதிகளில் கனரக வாகனங்களை பாடசாலை முடியும் வேளையில் செலுத்திச்செல்வதனாலும் வாகனங்களை தரித்துவைப்பதாலும் இந்த பிரச்சினைகளை பெற்றோர் எதிர்கொள்கின்றனர்.

ஆண்மையில் இதற்காக அப்பகுதியில் பாடாலை விடும் நேரங்களில் லொறி உட்பட கனரக வாகனங்கள் செல்லத்தடையென மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் அறிவிப்பு பலகையினை இட்டுள்ளபோதிலும் அதனையும் மீறி தொடர்ச்சியாக லொறிகளை அந்த வீதியுடாக செலுத்துவதன் காரணமாக பெற்றோர் பாடசாலை நேரங்களில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர்.

எனவே பாடசாலை விடும் நேரத்தில் குறித்த வீதியுடான கனரக வாகனங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் எனவும் பெற்றோர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.