ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நகரங்களை அழகுபடுத்தும் சுவர் ஓவியங்கள் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் ஓவியம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதேசங்களில் சுவர் ஓவியம் வரையும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் விடுதி மதில்களில வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவர்களிலும் மட்டக்களப்பு நகரின் புற நகர்ப்பகுதியான பிள்ளையாரடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுற்று மதிலிலும் இந்த ஓவியங்கள் வரையும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
இதனடிப்படையில் பிள்ளையாரடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுற்று மதிலில் அமைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் இன்று காலை திறந்துவைக்கப்பட்டன.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சரித்திர பிரசித்திபெற்ற இடங்களை அமைக்கப்பட்ட காலத்தினை சித்தரிக்கின்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
நிறைவேற்று பொறியியலாளர் ஏ. சசிநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் கே. சிவநாதன், சிறப்பு அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான பொறியியலாளர் திருமதி கே. வன்னியசிங்கம், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.