முனைத்தீவில் பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு சுவிஸ் உதயம் அமைப்பினால் வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சுவிஸ் நாட்டில் புலம்பெயர்ந்துவாழும் மட்டக்களப்பு மக்களின் உதவியுடன் இந்த பணிகளை சுவிஸ் உதயம் அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு பிரதேசத்தில் உள்ள வறிய நிலையில் உள்ள பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள் இன்று மாலை வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் பிரதி பேரின்பராஜாவின் துணைவியாரான வாணு பேரின்பராஜாவின் பிறந்த தினத்தினையொட்டி இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்கீழ் 26குடும்பங்களுக்கான சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையிலான பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை பிரதி செயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர்,மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றிய தலைவி திருமதி ரோமிலா கமல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.