மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனாவினால் தொற்குக்குள்ளானவர்களை அனுமதிக்ககூடாது என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடாத்தப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மகளிர் அணி உறுப்பினர்கள்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த கால யுத்ததினால் எமது உறவுகள் அழிந்தது போதாதா?,மட்டக்களப்பு மாவட்ட மக்களை கொரனா தொற்றிலிருந்து பாதுகாப்போம்,கொரனா சிகிச்சை மட்டக்களப்பில்வேண்டாம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையுமு; போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் கடந்த கால யுத்ததினால் பல அழிவுகளை சந்தித்து இன்று மூச்சுவிடும் நிலையில் மீண்டும் இந்த மாவட்டத்தினை அதளபாதாளத்திற்கு கொண்டுசெல்லும் செயற்பாடே இந்த நடவடிக்கையெனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏழை மக்களே சிகிச்சைபெறச்செல்லும் நிலையில் அங்கு கொரனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது அதன் மூலம் ஏழை மக்களே பாதிக்கப்படும் நிலையேற்படும் என்பதுடன் அது மாவட்டம் முழுதும் தொற்றும் நிலையேற்படும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனோவிற்கான சிகிச்சை வழங்கப்படுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண்களையும் ஒருங்கிணைத்து போராடவேண்டிய நிலையேற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.