மட்டக்களப்பு –கொழும் சேவையில் ஈடுபடும் பஸ்களில் தொற்று நீக்கும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு உட்பட தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் சொகுசு பஸ்களில் தொற்று நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் தனியா பஸ் ஊழியர்களுக்கு நிவாரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு உட்பட தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபட்டும் பஸ்களில் இருந்து ஏனையவர்களுக்கு கொரனா தொற்றுகள் ஏற்படாத வகையில் இன்று காலை சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களுக்கும் தொற்று நீக்கு மருந்துகள் தெளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் விஜயகுமார் பூபாலராஜாவின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அனைத்து பஸ்களுக்கும் தொற்று நீக்கி மருந்துகள் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
அத்துடன் ஊரடங்கு சட்டம் காரணமாக தூர இடங்களுக்கான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் பணியாற்றும் சாரதிகள்,நடத்துனர்கள்,உதவியாளர்கள் தொழில் அற்ற நிலையில் எந்தவித வருமானமும் இல்லாத நிலையில் உள்ளனர்.

அவர்களின் நன்மை கருதி இதன்போது தூர இடங்களில் சேவைகளில் ஈடுபடும் பஸ்களில் கடமையாற்றும் சாரதிகள்,நடத்துனர்கள்,உதவியாளர்களுக்கு உலர் உணவுப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் விஜயகுமார் பூபாலராஜா,மாநகரசபை உறுப்பினர் ரூபராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.