ஷஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாக கைதுசெய்யப்பட்டவர்களில் இருவருக்கு பிணை

ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த 64பேரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஷகரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து ஷஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேர் ஷஹ்ரானின் அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்றி பெற்ற மற்றும் அந்த  அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 64 பேரையும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் 03பேர்  பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 61 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து வாரியபொல பிரதேசத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 3 பேரும் , விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த 61 பேருடன் சேர்த்து  64 பேரையும்    இன்று செவ்வாய்கிழமை (25) நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து  வரப்பட்டு நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்கள் எதிர்வரும் 10ம் திகதி வரை 14 நாட்கள்   விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.