வாலிபர் முன்னணியால் ஆறுமுகத்தான் குடியிருப்பில் கற்றல் உபகரணம் வழங்கல்



மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி வாலிபர் முன்ணனியினால் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்முகமாக  செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு வாணி அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இன்று (09.02.2020) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன .

இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  வாலிபர் முன்னனி தலைவர் லோ.தீபாகரன் தமிழரசு கட்சியின்  வாலிபர் முன்னனி தலைவர் கி.சேயோன் வாலிபர் முன்னி கோறளைப்பற்று பிரதேச  (வாழைச்சேனை) இணைப்பாளர்  கே.தேவகாந்தன் , மண்முனை வடக்கு (மட்டக்களப்பு)  பிரதேச இணைப்பாளர் 
எஸ்.ஜனகன், வாலிபர் முன்னணியின்  கல்வி துறை பொறுப்பாளர் தே.மயூரன் ,
மாற்றுத்திறனாளிகள் அபிவிருத்தி துறை பொறுப்பாளர்  கே. சோபனன் , தமிழரசுக்கட்சியின் மகளீர் அணி செயற்பாட்டாளர் கந்தையா கலைவாணி ஆகியோர் கலந்துகொண்டனர் 

மேலும் ஆறுமுகத்தான் குடியிருப்பு பத்திரகாளியம்மன் கோயில் தலைவர் லோகிதராஜா , கோயில் நிர்வாகிகள் மற்றும் அறநெறி பாடசாலை  ஆசிரியர்கள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.