அம்பிளாந்துறையில் உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் உதயம்

கிழக்கு மாகாணத்தில் சுவிஸ் உதயம் அமைப்பினால் வறிய நிலையில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான தொடர்ச்சியான உதவிகளை மேற்கொண்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் வேண்டுகோளின் பேரில் சுவிஸ் உதயம் அமைப்பினால் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறையில் உள்ள இரண்டு வறிய குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 65மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர் பேரின்பராஜாவின் மகன் பே.அபிஷேக்கின் 16வயது பிறந்த தினத்தினை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதனை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் உபசெயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் உட்பட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது வறிய நிலையில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் 65மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.