கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

விழியில் பார்வையில்லாபோதிலும் சாதனை பிள்ளைகளை உருவாக்கிய பெற்றோர் –மட்டக்களப்பில் கௌரவம்

மட்டக்களப்பில் விழிப்புலன் அற்ற நிலையில் உயர்தர பரீட்சையில் சாதனைபடைக்கச்செய்த இரட்டை பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையினால் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் தலைவரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண தலைவருமான அ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண திணைக்கள பிரதம கணக்காளர் ஆ.உதயராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வல் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சா.அருள்மொழி,கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரி அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் விழிப்புலனற்ற தம்பதியினரின் இரட்டைப்பிள்ளைகளான தயராஜன் தனுஜன்,இதயராஜன் அனுஜன் என்னும் ஆகியோர் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் இருந்து கணித பிரிவில் தோற்றிய இருவரில் தனுஜன் மாவட்ட மட்டத்தில் 06ஆம் இடத்தினையும் அனுஜன் 18வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தந்தை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஸ்தாபகராகவும் உபதலைவராகவும் இருந்து செயற்பட்டுவரும் நா.இருதயராஜின் பிள்ளைகள் இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வினை தொடர்ந்து திருகோணமலை ரொட்டறிக்கழகத்தினரால் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான விழிப்புலனற்றோருக்கான கற்றல் இயந்திரங்கள் இதன்போது வழங்கிவைக்க்பட்டன.