பெண்களை வாக்கு சேகரிக்கும் இயந்திரமாகவே அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர் – செல்வி குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள் பெண்களை வாக்கு சேகரிக்கும் இயந்திரங்களாக மட்டுமே பயன்படுத்துவதாகவும் எதிர்காலத்தில் அந்த நிலைமையை பெண்கள் மாற்றியமைக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் பணிப்பாளருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண கூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயற்பாடும் மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்களைக்கொண்டதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் பணிப்பாளருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் நிர்வாக குழு தெரிவுசெய்யப்பட்டனது.

இதனடிப்படையில் தலைவராக சிவகீர்த்p டிலக்ஷி தெரிவுசெய்யப்பட்;டதுடன் செயலாளராக மனோகரன் பிரவீனா தெரிவுசெய்யப்பட்டார்.உபசெயலாளராக சதீஸ்குமார் சரளாவும் உபதலைவியாக பாலசுந்தரம் சுனிதாவும் பொருளாளராக சாரதாதேவியும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து நிர்வாக சபை உறுப்பினர்களாக 12பேரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அரசியல் கட்சி பேதம் அற்றமுறையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் பெண்களின் வாழ்வாதார முன்னேற்றம்,பெண்களின் பாதுகாப்பு,பெண்களின் அரசியல் உரிமைகள் உட்பட பெண்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக செயற்பாடுகளை மேற்கொள்ளல் என பல நடவடிக்கைகளை தமது அமைப்பு முன்னெடுக்கும் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் பணிப்பாளருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.