மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

பெரியகல்லாற்றில் தை பெங்கல் தினத்தை முன்னிட்டு கல்லாறு விளையாட்டு கழகத்தினால் மாபெரும் மரதன் ஒட்ட போட்டி இடம்பெற்றது


(புருசோத்)

பெரியகல்லாற்றில் தை பெங்கல் தினத்தை முன்னிட்டு கல்லாறு விளையாட்டு கழகத்தினால் மாபெரும் மரத்தன் ஒட்ட போட்டி இடம்பெற்றது தைப்பொங்ல் தினத்தை முன்னிட்டு பெரியகல்லாற்றில் வருடா வருடம் மரதன் ஓட்டப் போட்டி நடத்தி வருவது வழமை அதே போன்று இந்த வருடமும் பெரியகல்லாற்றில் தை பெங்கல் தினத்தை முன்னிட்டு கல்லாறு விளையாட்டு கழகத்தினால் மாபெரும் மரத்தன் ஒட்ட போட்டி இடம்பெற்றது.


இந் நிகழ்வானது ஞாயிற்று கிழமை (12) காலை 7.00 மணியளவில் சர்வார்த்த சித்தி வினாயகர் ஆலய முன்றலில்,
கல்லாறு விளையாட்டுக் கழகத்தின் தலைவரும்,ஆசிரியருமான சி.சசிகரன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் அதிதிகளாக மன்முனை தென் எருவில் பற்று பிரேத சபை உறுப்பினர்களான த.சுதாகரன்,ச.கணேசநாதன், மற்றும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர் சி.பேரின்பராஜா,விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் சி.முருகானந்தம், மற்றும் ஓய்வு பெற்ற உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் ந.நாகராசா, மற்றும் இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் முகாமையாளர் கே.சுரேஸ், பிரதான நிர்வாக உத்தியோகத்தர் இலங்கை மின்சார சபை கல்முனை பிராந்தியம் பெ.அகிலேந்திரன் உட்பட விளையாட்டு வீரர்கள்,இளைஞர்கள்,விளையாட்டுகழக உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.


இம்மரதன் ஓட்டப்போட்டியானது பெரியகல்லாறு சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதி சென்று ஊர்வீதியின் ஊடாக கிராமத்தை மூன்று தடைவகள் சுற்றி வந்தவர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர் அந்த வகையில் முதலாவது இடத்தை த.அஜந்தன் அவர்கள் தட்டி சென்றார் இவர் தெடர்ச்சியாக ஆறு வருட காலமாக முதல் இடத்தை தன்னகத்தே தக்க வைத்து கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்க விடயமாகும் அந்த வகையில் அவரே இவ்வருடத்துக்கான சம்பியன் பரிசைக் சுவீகரித்துக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தை ஆர்.ரஜிகாந்தும்,மூன்றாம் இடத்தை பீ.சனுகாந்தும் தட்டிக்கொண்டார்கள். அதேபோன்று முதல் 15 இடங்களை தட்டிக்கொண்டவர்களுக்கும் பணப்பரிசுகளும்,சிறப்புபரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது இந்த போட்டியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபெற்றி இருந்தனர்.

பெரியகல்லாறு கிராமத்தில் பழமை வாய்ந்த கழகமும் மரதன் ஓட்ட போட்டியினை இருபது வருடத்திற்கு மேலாக நடத்தி வருகின்ற கழகம் கல்லாறு விளையாட்டு கழகம் என்பதும் குறிப்பிட தக்க விடயமாகும்.